போக்குவரத்து விதிமீறல்.. மாநில அரசே முடிவெடுக்கலாம்

போக்குவரத்து விதிமீறல்.. மாநில அரசே முடிவெடுக்கலாம்

டெல்லி:
போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதங்களை விதிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது.

தற்போது புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது.

அதன்படி போலீசார் அபராத தொகைகளை வசூலித்து வருகின்றனர்.

இது போன்று அபராதத் தொகை அதிகமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

டெல்லியில் அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றியதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமான அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதங்களை விதிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்