‘தர்பார்’ கட்டவுட்டுக்கு ஹெலிகாப்டரில் மலர்

  • In Cinema
  • January 7, 2020
  • 224 Views
‘தர்பார்’ கட்டவுட்டுக்கு ஹெலிகாப்டரில் மலர்

சேலம்:

ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள ‘தர்பார்’ படத்தின் கட்டவுட்டுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ சேலம் ஆட்சியரிடம் ரசிகர்கள் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சேலம் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கில் முதல் காட்சியின்போது, படத்தை வரவேற்க கட்டவுட்டுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு அனுமதி கேட்டு சேலம் ரசிகர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த மனு வருவாய் கோட்டாட்சியர் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, வட்டாட்சியருக்கு, கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்