இணையத்தில் ‘தர்பார்’; தடுக்க உத்தரவு

  • In Cinema
  • January 9, 2020
  • 192 Views
இணையத்தில் ‘தர்பார்’; தடுக்க உத்தரவு

சென்னை:

ரஜினி நடித்த ‘தர்பார்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க ‘தர்பார்’ படம் தற்போது தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தர்பார் படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. திருட்டுத் தனமாக இணையதளங்களில் தர்பார் படம் வெளியிடப்பட்டால் மனுதாரருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும், இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் லைக்கா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனையடுத்து, திருட்டுத் தனமாக திரைப்படங்களை வெளியிடும் 1,370 இணையதளங்களில் ‘தர்பார்’ திரைப்படம் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தொலைதொடர்ப்ப நிறுவனங்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்