‘தர்பார்’ 7,000 தியேட்டர்களில் ரிலீஸ்

  • In Cinema
  • January 8, 2020
  • 180 Views
‘தர்பார்’ 7,000 தியேட்டர்களில் ரிலீஸ்

சென்னை:

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் நாளை 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. பெரிய திரைப்படங்கள் தற்போது வெளியாகத நிலையில் ஏராளமான தியேட்டர்களில் ‘தர்பார்’ திரைப்படம் ரிலீசாகிறது.

இந்தியாவில் மட்டும் சுமார் 4,000 தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மலேசியாவில் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்