ஒசூர் அருகே பாசி படிந்து சுகாதாரமற்ற முறையில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி

ஒசூர் அருகே பாசி படிந்து சுகாதாரமற்ற முறையில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி

ஒசூர் அருகே இடியும்நிலையில் ஆபத்தான மேல்நிலை நீர்தேக்கதொட்டி: அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை மேற்க்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள தக்கட்டி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளது

இந்த தண்ணீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகி உள்ளநிலையில் இதுநாள் வரை இந்த தொட்டியில் நீர் சேகரித்து விநியோகிக்கப்பட்டு வருகிறது

அசுத்தமானதாக இருக்கும் இந்த தொட்டி தற்போது பலவீனமாகவும் ஆபத்தான முறையில் இருந்து வருகிறது.

பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பழடைந்த நீர்தேக்க தொட்டியை சரி செய்யவோ, சுத்தப்படுத்தவோ இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.உயிரிழப்புக்கள் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தக்கட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்