தினமும் ஒரு முட்டையா? ஆண்மை குறைவா?

தினமும் ஒரு முட்டையா? ஆண்மை குறைவா?

முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் பகுதியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது என அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. வைட்டமின் எ, ஜின்க், காப்பர், பொட்டாசியம், வைட்டமின் கே, இரும்புசத்து போன்றவை முட்டையில் அதிக அளவில் உள்ளது. இவ்வாறு இருக்க இதனால் பாதிப்பு ஏற்படுமா!?

ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?

பலருக்கும் இந்த சந்தேகமும் இதை பற்றிய வதந்தியும் உள்ளது. முட்டையை ஃப்ரிட்ஜில் வைக்காமல் இருந்தால் இதனால் பாதிப்புகள் ஏற்பட கூடும். காரணம் இவற்றில் உள்ள பாக்டீரியாக்கள் தான்.

3 நாட்களுக்கு மேல் வெளியில் உள்ள முட்டையை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும்.இல்லையேல் பாக்டீரியாக்களினால் ஒவ்வாமை உண்டாகும்.

சர்க்கரை நோயை தடுக்குமா?

முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோய் முழுமையாக தடுக்க படாது. ஆனால், இதுவும் ஒரு காரணியாக சர்க்கரை நோயை தடுக்க உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சாப்பிட கூடிய உணவுடன் தினமும் 1 முட்டை சேர்த்து கொண்டால் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்புள்ளது.

மஞ்சள் கருவா!?

முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடவே கூடாது என ஒரு கும்பல் அலப்பறை செய்யும். ஆனால், அது அப்படி கிடையாது. மஞ்சள் கருவில் வைட்டமின் எ, கே, டி, பி பல்வேறு வைட்டமின் உள்ளன. ஆகையால் இதை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது தான்.

பாலும் முட்டையும்!

பாலுடன் முட்டையை கலந்து சாப்பிட்டால் அது விஷ தன்மை பெற்று விடும் என கூறப்படுகிறது. இது ஒரு வகையில் உண்மை தான்.

பாலையும் முட்டையும் சேர்த்து சாப்பிட்டால் அவை செரிமான கோளாறு, வாந்தி, மயக்கம், வாயு தொல்லை ஆகிய பிரச்சினைகளை உண்டாகி விடும். எனவே, இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?

முட்டையை சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலின் அளவு உயரும் சில நம்புகின்றனர். ஆனால், இது ஒரு வகையில் உண்மையும் கூட. கொலஸ்ட்ரால் பிரச்சினை கொண்டோர் மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளை கருவை சாப்பிட்டு வரலாம். இது ஆரோக்கிமானது தான்.

முட்டையும் கிருமியும்!

முட்டையில் சால்மோனெல்லா என்கிற பாக்டீரியா உள்ளது. ஆதலால், முட்டையை பச்சையாக சாப்பிடுவது பலருக்கு மோசமான பாதிப்பை உண்டாக்க கூடும்.

எனவே, நன்றாக சமைத்து சாப்பிட்டால் இந்த பாக்டீரியா இறந்து விடும். மேலும், முட்டையை கழுவுவதால் இந்த பாக்டீரியா முட்டையை விட்டு செல்லாது என்பதை உணருங்கள்.

ஆண்மை குறைவா?!

முட்டையை தினமும் சாப்பிட்டால் ஆண்மை குறைவு ஏற்படும் என்கிற பேச்சு உள்ளது. தினமும் முட்டை சாப்பிட்டால் ஆண்மை பலம் அதிகரிக்குமே தவிர, குறையாது என ஆய்வுகளே சொல்கின்றன. எனவே, தினமும் 1 முட்டையை ஆண்கள் சாப்பிடுவது நல்லது தான்.

தினமும் 1 முட்டையா?

தினமும் 1 முட்டை சாப்பிடலாமா என்கிற கேள்விக்கு பதில் “ஆம்” என்பதே. ஆனால், முட்டையை வேக வைத்து சாப்பிடுவதே சிறந்தது. இது உங்களுக்கு முழு ஊட்டச்சத்துக்களையும் அப்படியே தரும். மேலும், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்