சந்தானம் படத்தில் ஹர்பஜன் சிங்

  • In Cinema
  • October 14, 2019
  • 216 Views
சந்தானம் படத்தில் ஹர்பஜன் சிங்

சென்னை:

நடிகர் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான ஹர்பஜன் சிங் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிகர் சந்தானம் நடிக்கிறார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். அடுத்தாண்டு ஏப்ரலில் இப்படம் வெளியாகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்