ஓசூர் இதுவரை காணாத போராட்டத்தை காணபோகிறது, இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

ஓசூர் இதுவரை காணாத போராட்டத்தை  காணபோகிறது, இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சிபிஎம் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் அளித்த பேட்டியில்:

நாடே குடியுரிமை திருத்தசட்டத்தை திரும்ப பெற வேண்டுமென போராடுகிறது ஆனால் மோடி பின்வாங்க மாட்டேன் என அறிவித்திருப்பது அவர் ஆட்சியிலிருந்து கீழே இறக்கிவிடுவதற்கான காரணமாக அமையப்போகிறது,இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரும் போராடிவரும் நிலையில் அவர் கூறியிருப்பது அவரின் பாசிச சர்வதிகார மனப்பான்மையை காட்டுகிறது

ரஜினி இஸ்லாமியர்களுக்கான ஆபத்து நேரத்தில் போராடுவதாக கூறினார் என வண்ணார்பேட்டை விகாரம் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு:

அவர் இதுவரைக்கும் சொன்னதை எதையாவது செய்துள்ளாரா? அரசியலுக்கு வருவதாக 30,40 ஆண்டுகளாக பேசி வருகிறார் அவர் குறித்து காமெடி கேள்விகளை கேட்க வேண்டாம் என்றார்.

தமிழக அரசு உடனடியாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும் இல்லையெனில் ஆளும் அதிமுக அரசு அதற்கான விளைவுகளை சந்திக்கும்

மத்திய,மாநில அரசுகளின் பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட்டாக உள்ளது தமிழக இதுவரை இல்லாத அளவிற்க்கு கடன்சுமை உயர்ந்திருக்கிறது பொருளாதாரத்தில் மூழ்கி கொண்டிருப்பதற்கான அடையாளமாக உள்ளது

மத்திய அரசு தாய் போன்ற பொதுப்பணித்துறைகளை கிட்டத்தட்ட தனியாருக்கு விற்றுவிடுவதால் தாயை கொன்றுவிட்டு தாய்ப்பால் கொடுக்க போகிறோம் என்பது ஏமாற்று வேலை

சிறப்பு வேளாண்மை மண்டலம் குறித்த கேள்விக்கு: தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் அதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி அதன்பின் அறிவிப்பு வெளியிட்டிருந்தால் பாராட்டியிருப்போம் என்றார்.

டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதல்:

இஸ்லாமிய மாணவிகளின் பெண் உறுப்பை பார்த்து அடித்திருக்கும் கேவளம் எந்த நாட்டிலும் எந்த யுத்தகாலத்திலும் நடக்காதவை என்றார்

மேலும் பேசிய அவர் ஓசூர் மாநகரமே கண்டிராத மாபெரும் பேரணியை சிபிஎம் கட்சி மார்ச் 8 ல் இந்திய குடியுரிமை திருத்தசட்டத்தை எதிர்த்து நடத்த இருப்பதாகவும் பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக கூறினார்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்