பழமை வாய்ந்த மாட்டுத்திருவிழா துவக்கம்

பழமை வாய்ந்த மாட்டுத்திருவிழா துவக்கம்

ஒசூர்:

ஒசூர் அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாட்டுத்திருவிழா இன்று கே £லகலமாக தொடங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த திம்மச்சந்திரம் கிராமத்தில் ஸ்ரீ சப்பலம்மா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைப்பெறும் மாட் டுத்திருவிழா பிரபலமாக இருந்து வருகிறது.

200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் ஜனவரி மாத கடைசியில் தொடங்கும் இத்திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்காட்டு காளை வகை மாடுகள் வாங் குவதும், விற்பதுமான பண்டிகையாக சப்பலம்மா கோவில் திருவிழா விளங்குவதால், இந்த மாட்டுப்பண்டிகையில் மாடுகளை வாங்கவும் விற்கவும் தமிழகம் மட்டுமல்ல £து, ஆந்திர, கேரளா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்கவிருக்கின்றனர்.

ஆறு நாட்கள் நடைப்பெறும் இத்திருவிழாவின் முதல் நாள் இன்று தொடங்கி ஜனவரி 26 வரை நடைப்பெற உள்ளது.

தினமும் விஷேச பூஜைகளுடன் திருவிழா நடைப்பெற்றும், மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைப்பெற உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்