அவதூறு வழக்கு வைகோ விடுதலை

அவதூறு வழக்கு வைகோ விடுதலை

சென்னை:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது திமுக ஆட்சியில் அவதூறு வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். அப்போது மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியிருந்தார்.

இதனையடுத்து வைகோவுக்கு எதிராக கருணாநிதி சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் நடந்தது.

இதில் குற்றச்சாட்டு பதிவு மற்றும் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை என அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்தது.

வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி கருணாநிதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை தொடர்ந்து வைகோ மற்றும் அவரது கட்சித்தொண்டர்கள் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்