சளி, இருமலுக்கு இதமான மிளகு சீரக ரொட்டி செய்வது பற்றி உங்களுக்காக!

சளி, இருமலுக்கு இதமான மிளகு சீரக ரொட்டி செய்வது பற்றி உங்களுக்காக!

சென்னை: சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் மிளகு, சீரக ரொட்டி செய்து சாப்பிடுவதால் நன்மைகள் பெறலாம். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 2 கப்

மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்

சீரகத்தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை : ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நன்கு மிருதுவாகப் பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

உருண்டைகளை இரு கைகளின் நடுவில் வைத்துச் சிறிது அழுத்தம் கொடுத்து வட்டமாகச் செய்து கொள்ளவும். பிறகு சிறிதளவு மாவில் புரட்டி வட்டமாகத் தேய்த்துக்கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கங்களிலும் நன்கு உப்பிக்கொண்டு வரும் வரை வேகவைத்து எடுக்கவும். ருசியான மிளகு சீரக ரொட்டி தயார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்