கொரோனா பீதி, மலேசியா செல்ல வேண்டாம் மத்திய அரசு

கொரோனா பீதி, மலேசியா செல்ல வேண்டாம் மத்திய அரசு

 

புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால் இந்தியர்கள் யாரும் சிங்கப்பூர் செல்ல வேண்டாம் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.உலகம் முழுவதும் சீனா உள்ளிட்ட நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது கொரோனா. இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகிறோம். மேலும் இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.ஏற்கனவே முக்கியமாக கருதப்படும் 21 விமான நிலையங்களில் சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், போன்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் சோதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமும் சோதனை நடத்தப்படும்.இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேற்கூறிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல்,இருமல்அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்