30 வினாடிகளில் கொரோனா தொற்றை கண்டறிய கருவி

30 வினாடிகளில் கொரோனா தொற்றை கண்டறிய கருவி

கொரோனா தொற்றை வேகமாக கண்டறிய நவீன கருவியை உருவாக்குவதில் மத்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பணிகளில் இஸ்ரேலிய நிபுணர் குழுவுடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர்.

இதற்காக இஸ்ரேலிய உயர்மட்ட நிபுணர் குழு ஒன்று சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லி வந்தது. இந்த நிபுணர்கள் இந்தியாவின் தலைமை விஞ்ஞானி விஜய் ராகவன் மற்றும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்த கருவி உருவாக்கப்பட்டால் 30 வினாடிகளில் கொரோனா தொற்றை கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்