தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று புதிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று புதிய கொரோனா பாதிப்பு

கொரோனா எனும் கொடிய தொற்றால் இன்று மட்டும் 20 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 646, திருவள்ளூரில் 25, செங்கல்பட்டில் 22, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 14, தூத்துக்குடி மற்றும் சேலத்தில் தலா 10, கடலூரில் 9, கள்ளக்குறிச்சியில் 7, கன்னியாகுமரியில் 4, வேலூரில் 3, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரியில் தலா 2, விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி சென்ற 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.வெளிமாநிலங்களில் இருந்து ராமநாதபுரம், சேலம், விருதுநகர் சென்றவறுகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் மாநிலத்தில் இன்று மட்டும் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,342 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 35 பேர், குஜராத்தில் இருந்த வந்த 6 பேருக்கும், தலங்கானாவில் இருந்து வந்த 3 பேருக்கும், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் இருந்து வந்த தலா 2 பேருக்கும் கேரளாவில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. துபாயில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்