18 நாட்களாக.. உலக அளவில் புதிய கொரோனா கேஸ்களில் இந்தியாதான் முதலிடம்.. ஷாக்கிங் புள்ளி விவரம்!

18 நாட்களாக.. உலக அளவில் புதிய கொரோனா கேஸ்களில் இந்தியாதான் முதலிடம்.. ஷாக்கிங் புள்ளி விவரம்!

உலக அளவில் தினமும் அதிக கேஸ்கள் வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 18வது நாளாக உலக அளவில் இந்தியாவில்தான் அதிக கேஸ்கள் வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் மற்ற நாடுகள் விட மிக அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கேஸ்கள் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32 லட்சத்தை தாண்டி உள்ளது.

இந்தியாவில் மொத்த பாதிப்பு 3231754 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 66873 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா எப்படி
மகாராஷ்டிராவில் மட்டும் 703823 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு 10425 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில்தான் இந்தியாவில் அதிக பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 391303 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 5951 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

தமிழகம் நிலை

தமிழகம் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் 371639 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 9927 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 291826 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 8161 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

தினமும் எப்படி

உலக அளவில் தினமும் அதிக கேஸ்கள் வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 18வது நாளாக உலக அளவில் இந்தியாவில்தான் அதிக கேஸ்கள் வந்துள்ளது. அமெரிக்கா, பிரேசிலை விட பல்லாயிரம் கேஸ்கள் அதிகமாக இந்தியாவில் வருகிறது. சராசரியாக இந்தியாவில் கடந்த 10 நாட்களாக 55000 கேஸ்கள் தினமும் வருகிறது.

என்ன நாடுக்குள்

அமெரிக்கா, பிரேசிலில் 20000க்கும் குறைவாகவே தினமும் கேஸ்கள் வருகிறது. இதனால் அமெரிக்கா, பிரேசிலை இந்தியா விரைவில் முந்தும் என்று அஞ்சப்படுகிறது.அமெரிக்காவில் மொத்தமாக 5,930,876 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 24 மணி நேரத்தில் 15,246 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் மொத்தமாக 3,636,167 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 24 மணி நேரத்தில் 8950 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்