கொரோனா பரப்புவோருக்கு அபராதம்; மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழு

கொரோனா பரப்புவோருக்கு அபராதம்; மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழு

கொரோனா தொற்றை பரப்பும் வகையில், நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க, மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்றை பரப்பும் வகையில், நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் விதிக்கும் அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தில், முகக் கவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய்; தனிமைப்படுத்துதலை மீறுதல்; பொது இடங்களில் எச்சில் துப்புதல்; சமூக இடைவெளி பின்பற்ற தவறுவோருக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்த சட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதுஇதுகுறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:இந்த சட்டத்தை அமல்படுத்த, மாநில அரசு பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர், கண்காணிப்பு அதிகாரியாக செயல்படுவார். மாவட்ட அளவில், பொது சுகாதாரத்துறையின் துணை இயக்குனர், கண்காணிப்பு அதிகாரியாக செயல்படுவார். இந்த குழுவில், பொது சுகாதார துறையில் சுகாதார ஆய்வாளர், உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதார ஆய்வாளர், காவல்துறையில் எஸ்.ஐ., வருவாய் துறையில், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.இந்த குழுவினர், கொரோனா தொற்றை பரப்பும் வகையில் செயல்படுவோருக்கு அபராதம் விதிப்பதுடன், அதற்கான ஆவணங்களையும் பராமரிக்க வேண்டும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்