சாதாரண முழுக்கவச உடை விற்பனைக்கு வந்தாச்சு!

சாதாரண முழுக்கவச உடை விற்பனைக்கு வந்தாச்சு!

திருப்பூர்:தற்போது, கொரோனாவுடன் வாழப் பழக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட தனி மனித பாதுகாப்பு நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டு, பெருமளவு முறையாகப் பின்பற்றப்படும் நிலை காணப்படுகிறது.தற்போது பெரும்பாலான பகுதிகளில் முக கவசம் அணியும் முறை பின்பற்றப்படுவதால் இதன் தேவை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.தற்போது இதனுடன் முழு உடல் கவச உடை விற்பனையும் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இது பெருமளவு மருத்துவமனைகளில் மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்தும் வகையில் முழுமையான பாதுகாப்பு கவச உடையாக பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாட்டுக்கு ஏற்ப இதன் விலை ஆயிரக்கணக்கான ரூபாய் என்ற அளவில் உள்ளது.இது தவிர, சாதாரண பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் தயாரிக்கப்பட்ட மருத்துவப் பயன்பாட்டுக்கு அல்லாத முழு கவச உடையும் குறைந்த விலையில் விற்பனையாகிறது.தலை முதல் கால் வரை மூடும் வகையில், ஒரு முக கவசத்துடன் இவை விற்பனையாகிறது.இதன் விலை 300 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்