கமலுக்கு முன்ஜாமீன்..! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

கமலுக்கு முன்ஜாமீன்..! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

மதுரை:

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் மீது நாடுமுழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

மேலும் 13 இடங்களில் கமல்ஹாசன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா சார்பில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணையில், ஆதரங்களை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், தன் மீதான வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல்ஹாசன் மனுதாக்கல் செய்திருந்தார்.

விசாரணையில், கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா? என நீதிபதி கேட்டதற்கு, கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை; நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கமல் பேசிய விவகாரத்தை ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விவாதிக்கூடாது என்றும், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி புகழேந்தி , அரவக்குறிச்சியில் ஜாமின் உத்ரவாதம் தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனைகளுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்