காஷ்மீர் விவகாரம்.. காங்., எம்.பிக்களுடன் சோனியா ஆலோசனை

காஷ்மீர் விவகாரம்.. காங்., எம்.பிக்களுடன் சோனியா ஆலோசனை

டெல்லி:
மக்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று காலை சோனியாகாந்தி காங்கிரஸ் எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளித்து வந்த 370 நீக்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார்.

இந்த சட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், மக்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை அமித்ஷா தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 10:30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்களை சோனியாகாந்தி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்