காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு

மேட்டூர்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., குட்டப்பட்டி நாராயணன் 97, உடல் நலகுறைவால் காலமானார்.

காமராஜரின் தீவிர ஆதரவாளர் இவர். அது மட்டுமின்றி மூத்த காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களில் ஒருவர் ஆவார்.

கடந்த 1977ம் ஆண்டு மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்வானவர்.

1980ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவர் சுயேச்சை வேட்பாளர் செம்மலையை 19 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்நிலையில், தற்போது உடல்நல குறைவால் அவர் மறைந்துள்ளார். இவர் பொதுமக்களுக்கு பல சேவைகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்