ப.சிதம்பரத்திற்கு கட்சிக்குள் கண்டனம்

ப.சிதம்பரத்திற்கு கட்சிக்குள் கண்டனம்

புதுடெல்லி:

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற ஆம்ஆத்மி கட்சிக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்ததற்கு கட்சிக்குள்ளேயே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம்ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், பா.ஜ.,வை தோற்கடித்ததற்காக ப £ராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

ப.சிதம்பரத்தின் பேச்சுக்கு, பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், காங்கிரசின் மோசமான தோல்விக்கான காரணத்தை ஆராய்வதை விட்டுவிட்டு காங்கிரஸ் தலைவர்கள் ஆம்ஆத்மிக்கு பாராட்டு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில கட்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என்றால் மாநில காங்கிரஸ் கமிட்டிக்களை கலைத்துவிடலாமா என்றும் ஷர்மிஸ்தா, ப.சிதம்பரத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்