கோமாளி படம் எப்படி.. ட்விட்டரில் ரசிகர்கள் கருத்து

  • In Cinema
  • August 17, 2019
  • 226 Views
கோமாளி படம் எப்படி.. ட்விட்டரில் ரசிகர்கள் கருத்து

சென்னை:
ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இதற்கு இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வெவ்வேறானவை ஆகும்.

இந்த படம் குறித்து ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு திருப்திகரமான அதிகாலை காட்சி. தொடக்கத்தில் இருந்து கடைசி வரை படத்தை நம்முடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்.

ஜாலியாக ஆரம்பித்து நல்ல கருத்துடன் முடியும் ஒரு சரியான எண்டர்டெயினர் என்று இவர் கூறியுள்ளார்.

கோமாளி திரைப்படம் ஒரு காமெடி கலவரம். சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துள்ள படமாக அமைந்துள்ளது.

படக்குழு மிகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்த வருடத்தில் சிறந்த காமெடி திரைப்படம் என விமர்சித்துள்ளார்.

மேலும், படத்தின் இயக்குனர் பிரதீப் தந்திருக்கும் சிறந்த படம். கிளைமாக்ஸ் காட்சி சூப்பர்.

ஜெயம் ரவியின் நடிப்பையும், படங்களையும் தேர்ந்தெடுக்கும் அவரின் திறைமையை பாராட்டலாம். அனைவரும் பார்க்கும் படமாக அமைந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்