கோமாளி படத்தில் ரஜினி அரசியல் பற்றி கிண்டல்

  • In Cinema
  • August 5, 2019
  • 190 Views
கோமாளி படத்தில் ரஜினி அரசியல் பற்றி கிண்டல்

சென்னை:

கோமாளி படத்தின் டிரெய்லர் தற்போது தமிழகம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளது. அதற்கு காரணம் நடிகர் ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்து வைக்கப்பட்டிருந்த காட்சிதான் இதற்கு காரணம்.

நடிகர் ரஜினி 1996ம் ஆண்டு முதலே அரசியல் வருவதாக தெரிவித்து வருகிறார். எப்போது வருவேன், எப்படி வருவேன் என்று தெரியாது.

ஆனால் வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன் என்பதுதான் ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருவது வழக்கம்.

அதே போன்று தற்போது கோமாளி படத்தில் ஜெயம் ரவி ரஜினியின் அரசியல் பற்றிய செய்தியை பார்த்துவிட்டு இது 1996ம் வருடம்தான் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 1996ம் வருடத்திலிருந்தே ரஜினி இப்படித்தான் பேசிக் கொண்டு வருகிறார். ஆனால் இதுவரைக்கும் வந்த பாடில்லை என்று இயக்குனர் விமர்சித்திருந்தார்.

இதற்கு ரஜினியின் ரசிகர்கள் காமெடியாக எடுத்துக் கொள்ள முடியாமல் பாய்காட் கோமாளி என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்