வெளிநாடு செல்பவர்களுக்கு பயிற்சி.!

வெளிநாடு செல்பவர்களுக்கு பயிற்சி.!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள அத்திமுகம் வேளாண்மை கல்லூரியில் வெளிநாடு செல்லும் மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியினை கல்லூரி முதல்வர் முனைவர் விஜயராகவன், மேலாளர் திரு காளமேகம், மாவட்ட நீதித் துறை கண்காணிப்பாளர் சம்பத், மற்றும் பயிற்சியாளர் விஸ்வநாதன் ஆகியோர்கள் தொடங்கி வைத்தனர்.

வெளிநாடு செல்பவர்க்கான பாதுகாப்பு பயிற்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஆலோசனையின் பேரில் மாநில பயிற்சியாளர் விஸ்வநாதன் அவர்களால் அளிக்கப்பட்டது.

இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் சூளகிரி வட்டாட்சியர் ரெஜினா , மாவட்ட வட்டார அலுவலர் வளர்மதி, வருவாய் அலுவலர்கள் கோவிந்தராஜ் , ஆகியோர்கள் கலந்து கொண்டணர்.

மாநில பயிற்சியாளர் விஸ்வநாதன் அவர்கள் பேசுகையில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்கள் பாதுகாப்பு குறித்தும், போலி முகவர்களின் செயல்பாடுகள் மற்றும் சட்டப்படி கடவுச்சீட்டு மற்றும் அதன் அவசியங்களை எடுத்துரைத்தார்.

மேலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பாதுகாப்புக்காக எவ்வாறு இந்திய தூதரகத்தை நாடுவது என்றும், அங்கு அவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் பற்றியும், அங்கிருந்து எவ்வாறு பாதுகாப்பாக தாயகம் திரும்ப வேண்டும் என்றும் விபரமாக விளக்கினார்.

மேலும் இ மைக்ரேஷன் என்ற இணையதளத்தில் மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று எடுத்துக் கூறினார்.

இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியில் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்