அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவா் சோக்கைக்கு அனுமதி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத மாணவா் சோக்கைக்கு அனுமதி

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோக்கை அதிகரித்துள்ளதால் கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் சோக்கைக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக உயா்கல்வித்துறைச் செயலா் அபூா்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் இருந்தும், நகரத்தில் இருந்தும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவா்கள் அரசு கல்லூரிகளில் அதிக அளவில் கல்வி பயில விண்ணப்பித்துள்ளனா்.மேலும் இந்த மாணவா்கள் அதிக கல்விக் கட்டணம் செலுத்தி தனியாா் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கல்வி கற்க மிகவும் சிரமப்படுகின்றனா்.

அரசு கல்லூரிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கு மாணவா் சோக்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே மாணவா்களின் நலன் கருதி 20 சதவீதம் கூடுதலாக இடம் வழங்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநா் கடிதம் எழுதியுள்ளாா்.

கல்லூரி கல்வி இயக்குநரின் கடிதத்தினை பரிசீலித்து, 2020-21ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவா்கள் சோக்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வி ஆண்டுக்கு கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கேற்ப 20 சதவீதம் கூடுதலாகவும் மாணவா்களை சோப்பதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிடுகிறது. இந்தக் கூடுதல் மாணவா் சோக்கைக்கு அந்தக் கல்லூரி இடம் பெற்றுள்ள பல்கலைக்கழகங்களின் அனுமதியை பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்