நாணயக் கண்காட்சி; மாணவர்கள் ஆர்வம்

நாணயக் கண்காட்சி; மாணவர்கள் ஆர்வம்

ஒசூர்:

ஓசூர் மாநகராட்சி அரசுப்பள்ளியில் 101 உலகநாடுகளின் நாணயங்கள், பண நோட்டுகளின் கண்காட்சி மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள, சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 200க்கும் அதிகமான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்த மாணவர்கள் இந்தியாவில் முதன்முறையாக பயன்படுத்த தொடங்கிய நாணயங்கள் முதல் இதுவரை புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்கள் வரை பார்த்து தெரிவிந்துக்கொள்ளும் விதமாகவும், உலகில் உள்ள அமெரிக்கா,ஐரோப்பியா,கனடா உள்ளிட்ட பல நாடுகளின் நாணயங்கள் மற்றும் தற்போது பயன்படுத்தி வரும் பண நோட்டுக்கள் வரை அறிந்துக்கொள்ளும் விதமாக 101 உலக நாடுகளின் நாணய கண்காட்சி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை ஆசிரியர்களுடன், மாணவர்கள் நாணயங்களை பார்த்தும், உலக நாடுகளின் பணத்திற்கான இந்திய ரூபாயின் மதிப்பும் உலக வரைப்படத்தில் நாடுகள் அமைந்திருப்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி ஆசிரியர்கள் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்