அமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டை

அமெரிக்கா செல்லும் தேங்காய் சிரட்டை

பியூட்டி கிரீம், ஹேர் டை, குளியல் சோப்பு உள்ளிட்டவை தயாரிக்கும் மூலப்பொருளாக தேங்காய் சிரட்டையானது விருதுநகரில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.விருதுநகர் மாவட்ட விவசாயிகள், விவசாய கழிவுகளை பதப்படுத்தி லாபம் பார்க்கின்றனர். அந்த வகையில் ஓட்டல்கள், கொப்பறை தேங்காய் உற்பத்தியாளர்களிடம் இருந்து தேங்காய் சிரட்டைகளை சேகரித்து நெருப்பில் வாட்டி பவுடராக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.இதுபற்றி விருதுநகர் மூலிப்பட்டி விவசாயி திருமுருகன் கூறுகையில், ‘தேங்காய் சிரட்டைகளை கிலோ ரூ.8 க்கு வாங்கி நான்கு டன் அளவு கொண்ட தொட்டியில் நெருப்பில் வேக விடப்படும்.ஒரு டன்னுக்கு 350 கிலோ நன்கு சுட்ட சிரட்டைகள் கிடைக்கும். அவற்றை துாத்துக்குடி தொழிற்சாலைகளுக்கு கிலோ ரூ.25க்கு அனுப்புகிறோம். அங்கு சிரட்டையை பவுடராக்கி வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். அழுக்கு நீக்கும் தன்மை சிரட்டையில் இருப்பதால் அவற்றை மூலப்பொருளாக கொண்டு பியூட்டி கிரீம், குளியல் சோப்பு, ஹேர் டை, தண்ணீர் சுத்திகரிப்பான் (பில்டர்) உள்ளிட்டவை தயாரிக்க அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தொழில் காங்கேயத்திலும் நடக்கிறது’ என்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்