மு.க.ஸ்டாலின் சென்ற விமானத்தில் செல்ல மறுத்த முதல்வர்.!

மு.க.ஸ்டாலின் சென்ற விமானத்தில் செல்ல மறுத்த முதல்வர்.!

தி.மு.க., தலைவர் ஸ்டாலினுடன் ஒரே விமானத்தில் பயணிப்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தவிர்த்தார்.

திருச்சி அதிமுக புறநகர் மாவட்டச் செயலர் மற்றும் ராஜ்யசபா, எம்.பி., ரத்தினவேல் மகனின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் பழனிசாமி நேற்று திருச்சி வந்தார்.

திருமணம் முடிந்த பின்னர் இரவு 8:10 மணிக்கு, இண்டிகோ விமானத்தில் சென்னை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் செய்திருந்தனர்.

இதற்கிடையில், கரூரில் திமுக நிர்வாகிகளின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அதன் கட்சியின் தலைவர் ஸ்டாலினும் அதே விமானத்தில், சென்னைக்கு செல்வதாக தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து திமுக சார்பில் பேசி ஸ்டாலினை மற்றொரு விமானத்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாம். அவர்கள் மறுத்து விட்டதால் ஸ்டாலினை சந்திக்க முதலமைச்சர் பழனிசாமி விருப்பமில்லாமல் சேலத்துக்கு காரில் சென்றார்.

சேலத்தில் இருந்து இரவு 11:00 மணி விமானத்தில் சென்னை புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்