பசுமை தாயகத்தின் கருத்தரங்கம்

பசுமை தாயகத்தின் கருத்தரங்கம்

ஒசூர்:

ஓசூர் தனியார் பள்ளியில் பசுமைதாயகம் சார்பில் காலநிலை அவசரநிலை அறிவிக்க வலியுறுத்தி கருத்தரங்கம் நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜீமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில், பசுமைத்தாயகம் சார்பில் காலநிலை அவசர நிலை பிரகடனம் குறித்து கருத்தரங்கம் இன்று நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் பசுமைத் தாயகத்தின் செயலாளர் அருள் மற்றும் சிறப்பு ஆலோசகர் வினோபா பூபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அதை கட்டுப்படுத்த நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக மாணவர்களிடையே கருத்துரை வழங்கினார்கள்.

இதனைத்தொடர்ந்து, காலநிலை மாற்றம் குறித்த பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் ஒருவரும் பதினொன்றாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுத்து இரண்டு மாணவர்களை பசுமைத் தாயகத்தின் மாவட்ட தூதுவர்களாக தேர்ந்தெடுத்து கவுரவிக்கப்பட்டது.

பசுமைதாயகம் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது என மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்