குப்பையை சுத்தம் செய்த ஸ்பைடர் மேன்

  • In General
  • February 11, 2020
  • 253 Views
குப்பையை சுத்தம் செய்த ஸ்பைடர் மேன்

இந்தோனேசியா:

இந்தோனேசியாவில் ஸ்பைடர் மேன் உடையில் வாலிபர் ஒருவர் குப்பைகளை சுத்தம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

உலகின் மக்கள் தொகையில் 4வது பெரிய நாடாக இந்தோனேசியா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 3.2 மில்லியன் டன் குப்பை உற்பத்திய £வது ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த குப்பைகள் பாதி கடலுக்குள் தான் செல்கிறது.

குப்பைகளை முறையாக அகற்ற அந்நாட்டு அரசு திணறி வரும் நிலையில், கடலோரப்பகுதியான பாரிபாரி பகுதியை சேர்ந்த ரூடி ஹார்டோனோ என்பவர், தினமும் ஸ்பைடர்மேன் உடையில் குப்பைகளை அகற்றி வருகிறார்.

இதுகுறித்து ரூடி ஹார்டோனோ கூறுகையில், தொடக்கத்தில் நான் சாதாரண உடையில் இந்தப் பணியில் ஈடுபட்டேன். நிறைய மக்கள் இதுபோன்ற பணியில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அப்போது மக்களை இதில் ஈடுபடுத்துவது கடினமாக இருந்தது. பின்னர், ஸ்பைடர் மேன் உடை அணிந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டேன். அதன்பிறகு, பொதுமக்கள் ஈடுபாடு அபாரமாக இருந்தது என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்