ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்

  • In Cinema
  • September 2, 2019
  • 212 Views
ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட்

சென்னை:

தமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தற்போது தியேட்டர்களில் நேரடியாக டிக்கெட் பெற்றும், ஆன்லைனில் புக் செய்தும் சினிமா படங்களை பார்த்துவந்த நிலையில், ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யும் முறையை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும், சினிமா தியேட்டர்களில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்