ஜூலை 21ல் இயக்குனர் சங்கத்தேர்தல்!

  • In Cinema
  • July 2, 2019
  • 189 Views
ஜூலை 21ல் இயக்குனர் சங்கத்தேர்தல்!

சென்னை:

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தேர்தல் வரும் ஜூலை 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதன்படி, வரும் 2019 – 2021ம் ஆண்டுக்கான தேர்தல் நடத்த 99வது பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. இதில் தலைவராக இயக்குனர் பாரதிராஜா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக நேற்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, 100வது அவசரப் பொதுக்குழு வரும் 8ம் தேதி கூட்டப்பட்டு, ஜூலை 21ல் சங்கத்திற்கான தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்