சீனப்படைகள் குவிப்பால் எல்லையில் தொடரும் பதற்றம்

சீனப்படைகள் குவிப்பால் எல்லையில் தொடரும் பதற்றம்

புதுடில்லி: சீனா கூடுதல் படைகளை குவித்துள்ளது மற்றும் நம் விமானப்படை கூடுதல் விமானங்களை அனுப்பியுள்ளதால், இந்தியா – சீனா எல்லையில் பதற்றம் தொடருகிறது.இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது.மூன்று மாதங்களுக்கு மேலாக, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பல சுற்று பேச்சு நடத்தியும், படைகள் திரும்பப் பெறப்படவில்லை.எல்லையில் இருக்கும்போது, ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செப்., 7ம் தேதி இந்தியப் படைகள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கியால் சுட்டதாக, சீன ராணுவம் குற்றஞ்சாட்டியது.ஆனால், சீன படைகள்தான் ஆயுதங்களுடன் எல்லையில் அத்துமீற முயன்றதாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும், நம் ராணுவம் கூறியுள்ளது.’பிரச்னைக்கு தீர்வு காண பேச்சு ஒன்றே தீர்வு’ என, இரு தரப்பும் கூறி வருகின்றன.ஆனால், அதை மீறி, எல்லையில் சீன ராணுவம் கூடுதல் படைகளை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதை சமாளிக்கும் வகையில், நம் விமானப் படையும், சுகோய் – 30, மிக் ரக விமானங்களை அனுப்பியுள்ளது. இவற்றின் மூலம், கூடுதல் வீரர்களும், ஆயுதங்களும் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதனால், எல்லையில் பதற்றம் தொடர்கிறது.அமைச்சர்கள் சந்திப்புரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடும் நடந்து வருகிறது. அதில் பங்கேற்பதற்காக, நம் வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் சென்றுள்ளார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் அளிக்கும் விருந்தில், உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதைத் தவிர, ரஷ்யா, சீனா, இந்தியா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க உள்ளதாக, சீன வெளியுறவு அமைச்சர், வாங்க் யீ கூறியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்