சீனாவில் நிலநடுக்கம்; 11 பேர் பலி!

சீனாவில் நிலநடுக்கம்; 11 பேர் பலி!

பீஜிங்:

சீனாவில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து, 11 பேர் பலியாகியுள்ளனர்.

தென்மேற்கு சீனா பகுதியில் நேற்று 6.3 ரிக்டர் அளவாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிச்சுவான் மாகாணத்தின் இபின் நகரிலிருந்து 16 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என சீனா பூகம்ப நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், வீடுகளிலும், சாதலைகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் இடிந்து விழுந்ததாகவும், சாங்னிங் கவுண்டியில் 8 பேரும் கிக்ஸியன் கவுண்டியில் 3 பேரும் இறந்திருப்பதாகவும் 122 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் இபின் நகர அரசு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்