கொலீஜியத்தின் முடிவை மதிக்க வேண்டும்

கொலீஜியத்தின் முடிவை மதிக்க வேண்டும்

டெல்லி:
சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்ற ‘கொலீஜியம்’ (நீதிபதிகள் குழு) பணி இடமாற்றம் செய்தது.

இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தஹில் ரமானி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள அகில இந்திய வக்கீல்கள் சங்கம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி உச்ச நீதிமன்ற கோர்ட்டு கொலீஜியத்தின் முடிவை மதிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் அவர் கொலீஜியத்தின் முடிவால் பயன் அடைந்திருக்கிறார்.

அவருடைய பணியிட மாற்றத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பது, யாராக இருந்தாலும் நியாயமான செயல் அல்ல.

அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மூன்று முறை தற்காலிக தலைமை நீதிபதியாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

கொலீஜியம் அவருக்கு எதிராக எந்த புகாரையும் முன்வைக்கவில்லை என்ற போது, கொலீஜியத்தின் கூட்டு முடிவை அவர் மதிக்க வேண்டும்.

அவர் மேகாலயா உயர் நீதிமன்றத்தையும், அதனுடன் தொடர்பு உடையவர்களையும் வேறுபடுத்தி பார்க்காமல், இந்த பணியிட மாற்றத்தை சரியான முறையில் ஏற்று மேகாலயா உயர் நீதிமன்றத்தில் பொறுப்பேற்றிருக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்