டெல்லியில் வன்முறை: தலைமை நீதிபதி அதிருப்தி

டெல்லியில் வன்முறை: தலைமை நீதிபதி அதிருப்தி

புதுடெல்லி:

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டம் என்ற பெயரில் வன்முறை நடந்துள்ளது அதிருப்தியளிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் குடியுரிமை திருத்த சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. இதனை எதிர்த்து டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் நேற்று 4 பஸ்கள் மற்றும் 2 போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. போலீசார் மீது கல்வீச்சு தாக்குதலில் மாணவர்கள் ஈடுபட்டு கலவரமாக மாறியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்தே, போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்த அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவே காவல்துறை உள்ளது. யார் கலவரம் செய்தனர், யார் அமைதியாக போராடினர் என்பதை நாங்கள் இப்போது சொல்ல முடியாது. முதலில் அங்கு அமைதி நிலவட்டும். வன்முறையை நிறுத்தினால் நாளையே வழக்கை விசாரிக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்