‘‘திகாருக்கு அனுப்பாதீங்க’’

‘‘திகாருக்கு அனுப்பாதீங்க’’

புதுடெல்லி:

என்னை திகார் சிறைக்கு அனுப்பிவிடாதீர்கள்; வீட்டுக்காவலில் கூட வையுங்கள் என உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் கெஞ்சியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிந்தது. இதனையடுத்து, அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆனால், அமலாக்கத்துறை கைது செய்வதை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பிலும் மனு தாக்கல் செய்திருந்தது.

இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை கைதுக்கு எதிரான வழக்கில் செப்டம்பர் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர் கபில்சிபல், சிதம்பரத்துக்கு 74 வயதாகிறது எனவும், அவரை திகாருக்கு அனுப்பி விடாதீர்கள்; கடும் நிபந்தனையுடன் வீட்டுக்காவலில் வையுங்கள் வழக்கை ஒத்திவைத்தால் திகார் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.

இதனையடுத்து, 74 வயதாகும் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம். கீழமை நீதிமன்றத்தை அனுகி ஜாமின் பெற்றுக் கொள்ளலாம். சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஜாமின் மறுக்கப்பட்டால், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி இருக்கும். அமலாக்கத்துறை வழக்கில் செப்.,5 ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட சிபிஐ காவல் செப்., 5 வரை நீட்டிக்கப்படுகிறது.” இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்