நோயை காரணம் காட்டி ஜாமீன் கோரும் சிதம்பரம்

நோயை காரணம் காட்டி ஜாமீன் கோரும் சிதம்பரம்

டெல்லி:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.

இதனையடுத்து அவர் செப்டம்பர் 19ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்கிறார் சிதம்பரம்.

ஜாமீன் கேட்பதற்கு புது வகையான பார்மூலாவை தேர்வு செய்திருக்கின்றனர் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள்.

சிதம்பரத்திற்கு 9 வகையான நோய்கள் இருப்பதாகவும் 74 வயதாகி உள்ளது என்றும், இதன் அடிப்படையில் ஜாமீன் வழங்குமாறு சிதம்பரம் தரப்பு திட்டம் வகுத்துள்ளது.

இந்த ஜாமின் மனு லீக் ஆகிவிட்டது. சிதம்பரத்துக்கு, டிஸ்லிபிடிமியா, கரோனரி தமனி நோய் , ஹைப்பர் டென்ஷன், கிளைசீமியா, எரிச்சல் கொண்ட குடல் நோய் , புரோஸ்டாடோமேகலீ, நுண்ணிய ஹெமாட்டூரியா, கிரோன் நோய் உள்ளிட்ட 9 வகையான நோய்கள் இருப்பதாகவும் இதனால் ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்து.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை இன்று வரும் என கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்