சென்னை மக்களுக்கு குடிநீர் அதிரிகரிக்கப்படும்

சென்னை மக்களுக்கு குடிநீர் அதிரிகரிக்கப்படும்

சென்னை:
கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதில் அவர் பேசியதாவது: வடசென்னை பகுதியிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்க, கொடுங்கையூரில் 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், இன்று என்னால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மேலும் அதிகரிக்கப்படும். கோயம்பேட்டில் 45 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட 3ம் நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடியும்.

இதன் மூலம் நாட்டிலேயே அதிகபட்சமாக கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழும்.

சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, கண்டலேறு அணை 25.9.2019 அன்று திறக்கப்பட்டது.

தற்போது கிருஷ்ணா நீர், பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. இதனால் சென்னை மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்