குற்ற வழக்குகளை மறைத்தவர்களுக்கு பணி நியமனம் பெற உரிமை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

குற்ற வழக்குகளை மறைத்தவர்களுக்கு பணி நியமனம் பெற உரிமை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:
விண்ணப்பத்தில் குற்ற வழக்குகளை மறைத்தவர்களுக்கு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் பணி நியமனம் பெற உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2017ல் நடந்த காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், பலபேர் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், விண்ணப்பத்தில் அதனை மறைத்துள்ளதாகவும், தங்களது விண்ணப்பத்தை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நிராகரித்தை எதிர்த்து பிரவீன் குமார், அழகு ராஜ் உள்ளிட்ட 46 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி சுரேஷ்குமார் உள்ளிட்ட அமர்வு முன் இன்று நடைபெற்றது.

விசாரணையில் காவல்துறை பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அப்பழுக்கற்ற குணநலன்களும், நேர்மையும் கொண்டிருக்க வேண்டும்.

குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களாக இருந்தால், காவல்துறை பணிக்கு உகந்தவர்கள் அல்ல என உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிகாட்டி, சந்தேகத்தின் அடிப்படையில், குற்ற வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றவர்களின் விண்ணப்பங்களையும் நிராகரித்த தேர்வு வாரிய உத்தரவு செல்லும் என நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்