சவரனுக்கு 960 ரூபாய் குறைந்தது

  • In Chennai
  • September 10, 2019
  • 200 Views
சவரனுக்கு 960 ரூபாய் குறைந்தது

சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 6 தினங்களில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலையால், ரூபாய் மதிப்பு சரிந்து சர்வதேச அம்சங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை இந்த மாத துவக்கத்தில் இருந்தே கடுமையாக உயர்ந்தது.

சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்து. கடந்த 4ம் தேதி சவரன் ரூ30 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலையில் இருந்து 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 14 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 645 ரூபாய்க்கும், ஒரு சவரன் 112 ரூபாய் விலை இறங்கி 29 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்