சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: அச்சத்தில் சிக்கும் மாவட்டங்கள்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: அச்சத்தில் சிக்கும் மாவட்டங்கள்

தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று கரோனாவால் 1,438 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. இன்று 861 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 15,762 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 18,693 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 1,116 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது.

அரியலூரில் இரண்டு பேருக்கும், செங்கல்பட்டில் 86 பேருக்கும், கடலூரில் மூன்று பேருக்கும், திண்டுக்கல்லில் இரண்டு பேருக்கும், மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் 8 பேருக்கும், வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய 4 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும், கன்னியாகுமரியில் வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கும், கரூரில் ஒருவருக்கும், மதுரையில் 9 பேருக்கும், நாகப்பட்டினத்தில் மூன்று பேருக்கும், பெரம்பலூரில் ஒருவருக்கும், புதுக்கோட்டையில் 5 பேருக்கும், ராமநாதபுரத்தில் நான்கு பேருக்கும், ராணிப்பேட்டையில் 14 பேருக்கும், சேலத்தில் 6 பேருக்கும், வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

சிவகங்கையில் ஒருவருக்கும், தென்காசியில் இரண்டு பேருக்கும், தஞ்சாவூரில் ஒருவருக்கும், தேனியில் இரண்டு பேருக்கும், திருப்பத்தூரில் ஒருவருக்கும், திருவள்ளூரில் 64 பேருக்கும், திருவண்ணாமலையில் 13 பேருக்கும், திருவாரூரில் நான்கு பேருக்கும், தூத்துக்குடியில் 11 பேருக்கும், திருநெல்வேலியில் இரண்டு பேருக்கும், திருச்சியில் 12 பேருக்கும், வேலூரில் மூன்று பேருக்கும், விழுப்புரத்தில் 7 பேருக்கும், விருதுநகரில் 7 பேருக்கும், விமான நிலையம் மூலமாக வந்தவர்களில் 14 பேருக்கும், ரயில் மூலமாக வந்தவர்களில் 12 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.,

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்