வேதியியலில் அன்று 24 மதிப்பெண்- இன்று ஐஏஎஸ் அதிகாரியாகி சாதனை

வேதியியலில் அன்று 24 மதிப்பெண்- இன்று ஐஏஎஸ் அதிகாரியாகி சாதனை

பிளஸ் 2 வேதியியலில் வெறும் 24 மதிப்பெண்களை மட்டுமே எடுத்த மாணவர் ஒருவர், இன்று ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாயின. இந்த நேரங்களில், அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் வீடுகளில் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் வீடுகளில் பெற்றோரும்,உறவினர்களும் கூறும் வார்த்தைகளில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையே அந்த மாணவர்கள் இழப்பார்கள்.
அதில், வேதியியல் பாடத்தில் அவர் 70-க்கு 24 மதிப்பெண்களை மட்டுமே பெற்றிருக்கிறார். மற்ற பாடங்களிலும் சுமாரான மதிப்பெண்களையே அவர் எடுத்திருக்கிறார். ஆனால் இந்த மதிப்பெண்கள், அவர் ஐஏஎஸ் அதிகாரியாக உருவாவதை தடுக்கவில்லை.

அந்த மதிப்பெண் பட்டியலின் கீழே, நிதின் சங்வான் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது நண்பர்கள் – உறவினர்கள் வட்டங்களில் அவர்களின் பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த பேச்சே தற்போது அதிக அளவில் உள்ளது. இதில், குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களின் பெற்றோர் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆனால், அந்த மாணவர்கள் தற்போது எடுத்திருக்கும் மதிப்பெண்ணை விட மிகக் குறைவான மதிப்பெண்களையே எனது பள்ளி நாட்களில் நான் பெற்றிருக்கிறேன். ஆனால், அவை எனது வாழ்க்கையை தீர்மானிப்பதை நான் அனுமதிக்கவில்லை. தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக பதவியில் இருக்கிறேன். மதிப்பெண்களை விட வாழ்க்கை மிகவும் பெரியது. இதனை உணர்த்துவதற்காகவே எனது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன். இவ்வாறு தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற நித்தின் சங்வான், தற்போது அகமதாபாத் நகராட்சி துணை ஆணையராக பதவி வகித்து வருகிறார்
இந்நிலையில், ஒருவரது வாழ்க்கையை அவர் எடுக்கும் மதிப்பெண்கள் தீர்மானிக்காது என்பதை நிரூபிக்கும் விதமாக, தனது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை ஐஏஎஸ் அதிகாரி நித்தின் சங்வான், ட்விட்டர் வலைதளத்தில் நேற்று பகிர்ந்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்