‘சந்திரயான் 2’வின் 2வது புகைப்படம்

‘சந்திரயான் 2’வின் 2வது புகைப்படம்

‘சந்திரயான் 2’ விண்கலம் எடுத்த நிலவின் 2வது புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ‘சந்திரயான் 2’ விண்கலம், கடந்த 22ம் தேதி நிலவை நெருங்கிய நிலையில், 2,650 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து விக்ரம் லேண்டர் மூலம் தனது முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியிருநந்தது.

இந்நிலையில், ‘சந்திரயான் 2’ விண்கலம் எடுத்த 2வது புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 2ம் தேதி விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவைச் சுற்றிவரும். செப்டம்பர் 7 ம் தேதி விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை குறைக்கப்பட்டு நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்