லேண்டர் விக்ரம் எப்படி தரையிறங்கும்?

லேண்டர் விக்ரம் எப்படி தரையிறங்கும்?

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் லேண்டர் விக்ரம் நாளை (7 செப்) அதிகாலை நிலவில் தரையிறங்க உள்ளது.

லேண்டர் 7 நிலைகளாக நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.

1. நிலவின் மேற்பரப்பில் 35 கி.மீ., தூரத்தை நெருங்கும் போது லேண்டர் விக்ரம் இறுதிக் கட்டமாக தரையிறங்கும் வேலையை துவக்கும்.

2. 10 நிமிடங்களில் நிலவின் தரைப்பகுதிக்கு 7.4கி.மீ., தூரத்தை அடையும்.

3. 38 விநாடிகளில் 5 கி.மீ., தூரத்தை அடையும்.

4. அடுத்த 89 விநாடிகளில் 400 மீட்டர் தூரத்தில் மிதந்தபடி, விக்ரம் நிலவு பற்றி தகவல்களை சேகரிக்கும்.

5. இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் 100 மீட்டர் தூரத்தில் விக்ரம் நிறுத்தப்படும். தரையிறங்குவதற்கு 2 இடங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும்.

6. 65 விநாடிகளில் நிலவிற்கு 10 மீட்டர் தொலைவில் நெருங்கி செல்லும் லேண்டர், முதற்கட்டமாக தரையிறங்கும் இடத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் தரையிரங்குவதற்கு தயாராகும்.

7. பிறகு 13 விநாடிகளில் நிலவின் தரைப்பகுதியை லேண்டர் விக்ரம் சென்றடையும் என்று இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்