ராஜகோபுர பணிகள் தீவிரம்

ராஜகோபுர பணிகள் தீவிரம்

ஒசூர்:

ஓசூர் சந்திரசூடேஷ்வர கோவிலின் இராஜகோபுர பணிகள் தீவிரம்: தேர்திருவிழாவிற்கு முன் நிறைவடைய இருப்பதாக அறநிலையத்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் அமைந்துள்ள சந்திரசூடேஷ்வர் திருக்கோவில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாக இருந்து வருகிறது. இந்த கோவிலை வைசலாக்கள் ஆட்சியின் போது கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் தேரோட்டத்தில் கர்நாடகா, ஆந்திரம், கேரளா உள்ளிட்ட ஏராளமான மாநிலத்தவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சந்திர சூடேஷ்வரர் திருக்கோவிலில் இராஜ கோபுரம் அமைக்கும் பணிகள் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.

7 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் இந்து அறநிலையத்துறை மற்றும் தனியார் நிறுவனத்தின் சார்பில் ராஜ கோபுர பணிகள் சற்று தாமதமாகி இருந்த நிலையில், 90 சதவீத பணிகள் நிறைவடைந்ததையடுத்து மீதமுள்ள பணிகள் இரவு பகலாக நடைப்பெற்று வருகிறது.

ஆண்டுதோறும் தேரோட்டம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைப்பெறுவதால், இந்தாண்டு தேரோட்டத்திற்கு முன்பாகவே இராஜ கோபுர பணிகளை விரைந்து முடிக்க இருப்பதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்