மத்திய அமைச்சர் மீது தாக்குதல்.. பாஜக ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சர் மீது தாக்குதல்.. பாஜக ஆர்ப்பாட்டம்

கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ நேற்று மாலை சென்றபோது, அங்கிருந்த மாணவர் அமைப்பினர் அமைச்சர் மீது தாக்குதல் நடத்தி சிறை பிடித்தனர்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அம்மாநில ஆளுநர் உடனடியாக விரைந்து சென்று மத்திய அமைச்சரை மீட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீதான தாக்குதலை கண்டித்து கொல்கத்தாவில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்