ரூ.6,000 சம்பளம்; இப்படியும் செல்போன் திருட்டு

ரூ.6,000 சம்பளம்; இப்படியும் செல்போன் திருட்டு

சென்னை:

சென்னையில் ரூ.6,000 ஆயிரம் சம்பளத்தில் செல்போன் திருட்டு தொழிலில் ஈடுபட்ட 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பூக்கடை பகுதியில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் செல்போன் திருட்டில் ஈடுபடுவதாக யானைகவுனி போலீசார் நோட்டமிட்டனர். அப்போது அந்த இளைஞர்களை சோதனையிட்டதில், கையில் செல்போன்கள் இல்லாததால் அவர்களை விடுவித்து தொடர்ந்து நோட்டமிட்டனர்.

போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரியை அடுத்த ஆட்டோ நகர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களை, ரவி என்பவர் சென்னை அழைத்து வந்துள்ளார்.

அந்த இளைஞர்கள் மூலம், மக்கள் கூடும் இடங்களில் ஏராளமான செல்போன்களை திருடி வந்ததும், அவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.6,000 கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

சென்னை செங்குன்றம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தநிலையில், செல்போன் உதிரி பாகங்களை மாற்ற ஆந்திராவில் ஆள் வைத்திருப்பதும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலையில்லா இளைஞர்களை ஆந்திராவிலிருந்து அழைத்து வந்து மாத சம்பளம் கொடுத்து திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்