தஞ்சாவூர் வந்தது காவிரி நீர்

தஞ்சாவூர் வந்தது காவிரி நீர்

தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயில் வியாழக்கிழமை பிற்பகல் காவிரி நீர் வந்தடைந்தது.

மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காகக் கல்லணையும் ஜூன் 16-ம் தேதி திறக்கப்பட்டது.

வெண்ணாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சாவூருக்கு புதன்கிழமை மாலை வந்தடைந்தது. காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் திருவையாற்றுக்கு வியாழக்கிழமை காலை வந்தது.

கல்லணைக் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை பிற்பகல் வந்தது. இதனிடையே தஞ்சாவூர் சீனிவாசபுரத்தில் கல்லணைக் கால்வாயில் முற்பகலில் வந்த தண்ணீரை பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி, மலர் தூவி வழிபட்டனர்.கல்லணையிலிருந்து கல்லணைக் கால்வாயில் புதன்கிழமை வரை விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், வியாழக்கிழமை காலை விநாடிக்கு 1,011 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது.

இதேபோல காவிரியில் விநாடிக்கு 3,262 கன அடி வீதமும், வெண்ணாற்றில் விநாடிக்கு 3,275 கன அடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்