களைகட்டும் கேன்ஸ் திரைப்பட விழா..!

களைகட்டும் கேன்ஸ் திரைப்பட விழா..!

கேன்ஸ்:

உலகளவில் உயரிய திரைப்பட விருதுகளில், ஆஸ்கார், கோல்டன் குளோப் விருதுகள் கருதப்படுகின்றன. இதேபோன்று பெர்லின், வெனிஸ், டொராண்டோ வரிசையில் கேன்ஸ் திரைப்பட விழாவும் பிரபலமாகும்.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில், ஆண்டுதோறும மே மாதத்தில் இந்த கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், 72வது கேன்ஸ் திரைப்பட விழா இன்று துவங்கி வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழை£வில், சர்வதேச பொழுதுபோக்கு திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவண படங்களும் போட்டியிடும். சிறந்த படத்திற்கு கோல்டன் பாம் அவார்டு எனப்படும் விருது வழங்கப்படுகிறது.

இத்திரைப்பட விழாவில், இந்த ஆண்டு 21 படங்கள் இடம்பெற்றுள்ளன. திரைப்படத்துறையை சார்ந்தவர் மற்றும் பத்திரிகையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால் உரிய அழைப்பு இருந்தால் மட்டுமே விழா அரங்கிற்குள் நுழைய முடியும்.

இவ்விழாவில் ஹாலிவுட் உட்பட உலக நட்சத்திரங்கள் பல்வேறு புதுமையான ஆடைகளில் பவனி வருவார்கள் என்பதால், கேன்ஸ் நகரமே களைகட்டியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்